முகப்பு /செய்தி /சென்னை / சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய பணிகள் மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய பணிகள் மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

 காட்சிப் படம்

காட்சிப் படம்

Chennai 2.O | சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிய திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திட 2022 நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள் , 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 16 பள்ளி கட்டிடங்கள் மற்றும் புராதான சின்னமான விக்டோரியா பொது அரங்கும் புதுப்பிக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.98.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகளை கண்காணிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மினா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது கண்காணிப்பு குழு வழங்கியுள்ள வழிகாட்டுதலை பின்பற்றி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.98 கோடி நிதியில், ரூ.3.5 கோடி செலவில் பூங்காக்களும், ரூ.1.15 கோடி செலவில் விளையாட்டு திடல்களும் ரூ.3.8 கோடி செலவில் மயான பூமியும் ரூ.56 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளும், ரூ.32 கோடி செலவில் விக்டோரியா பொது அரங்கு புதுப்பிக்கும் பணிகள் உட்பட மொத்தம் 42 வகையான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai corporation