முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - மாநகராட்சி விளக்கம்

சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - மாநகராட்சி விளக்கம்

மாநகராட்சி பணியாளர்கள்

மாநகராட்சி பணியாளர்கள்

சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் கடந்த சில நாட்கள் கொசு தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகமான புகார்களும் பொதுமக்களிடம் வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 250 கி. மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதாகவும், 239 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர்நிலைகளில் 58.34 கி.மீ. நீளத்திற்கு டிரோன் மூலமாக கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 2,919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. 16 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர் நடவடிக்கையாக தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai corporation, Local News, Mosquito