Home /News /chennai /

சென்னை வெள்ளம் மேலாண்மை: ரூ.50 கோடி செலவில் தயாராகும் ஸ்பாஞ்ச் பார்க்

சென்னை வெள்ளம் மேலாண்மை: ரூ.50 கோடி செலவில் தயாராகும் ஸ்பாஞ்ச் பார்க்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை பெறும்பட்சத்தில், மற்ற இடவசதி உள்ள பூங்காக்களில், ஸ்பாஞ்ச் குட்டைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் மழை நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே பூமிக்குள் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு கட்டிடங்கள், கான்கிரீட் சாலைகளால் நிலப்பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து பல நாட்கள் தேங்கிவிடுகிறது. எனவே, மழைநீரை பூமி உறிஞ்சுவதற்கான வழிமுறையாக, மழைநீர் சேகரிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய முயற்சியாக ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனப்படும் நீர் உறிஞ்சி பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இந்த பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, சுற்றி மரக்கன்றுகள் நடப்படும். மழைநீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்பட்டு, அதன் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில் அமைக்கப்படும். மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், மழைநீர் வடிகால் வாயிலாக, ஸ்பாஞ்ச் குட்டைக்குள் நீர் கொண்டு வரப்படும். குட்டை நிரம்பும்பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய் வாயிலாக, அருகிலுள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். இதன் வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க முடியும் என்கிறார் இத்திட்டத்தை வடிவமைத்த ஸ்பாஞ்ச் கான்செப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மானுஷி

    அரசு ஒப்புதலுக்கு பின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை பெறும்பட்சத்தில், மற்ற இடவசதி உள்ள பூங்காக்களில், ஸ்பாஞ்ச் குட்டைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி