Home /News /chennai /

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: அமைச்சர் மா. சுப்ரமணியன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: அமைச்சர் மா. சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் பயிலும் 285 மாணவ மாணவியர்களுக்கு  67.39 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது: " மாநகராட்சி கல்வித்துறை என்பது சிறந்த துறையாக உள்ளது. மாநகராட்சி பள்ளியில் 1996 ஆண்டு சேர்க்கை 50% சதவீதம் இருந்தது. அதற்கு பிறகு 76 % அதிகரித்தது. மேலும் 2006 ஆண்டு 90% அதிகரித்தது, இது அனைத்தும் தற்போது முதல்வரால் தான் சாத்தியமானது.

இதையும் வாசிக்கபொறியியல் கலந்தாய்வு : 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு - தமிழக அரசு

 

வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் என தற்போதைய முதலமைச்சர் மேயராக இருந்த போது தொடங்கி வைத்தார். அதிலிருந்து மாநகராட்சி பள்ளிகளில் கணினி அமைப்பதற்காக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அதற்கு பிறகு மாநகராட்சி பள்ளிகள் கணினி வாங்கப்பட்டது.

 



சிறப்பாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 6% சதவீதம் குறைந்த உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை கணக்கில் எடுத்து கொள்ள முடியா விட்டாலும் மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்தி காட்ட வேண்டும். மாணவர்களின் கல்விக்கான கட்டமைப்பை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும் அதற்கு நிதி அளிக்க அரசு தயாராக உள்ளது"  என்று அமைச்சர் பேசினர்.
Published by:Salanraj R
First published:

Tags: Chennai, Tn schools

அடுத்த செய்தி