முகப்பு /செய்தி /சென்னை / மெரினாவில் இனி இலவச வை-பை சேவை! - சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

மெரினாவில் இனி இலவச வை-பை சேவை! - சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

இலவச வைஃபை

இலவச வைஃபை

Chennai | சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டம். விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையில் ஏராளமான வசதிகளுடன் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே, மெரினா சர்வீஸ் சாலையில் சிறுவர் பூங்கா, கண்கவர் சிற்பங்கள் போன்றவை உள்ள நிலையில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை (wifi Internet) வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

Also see... குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில்  wifi hotspot நிறுவப்படவுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுத்த உள்ள இந்த இலவச இணைய சேவை திட்டம் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai corporation, Wifi