ஹோம் /நியூஸ் /சென்னை /

வருமானம் குறைவான அம்மா உணவகங்களை மூட நடவடிக்கை? சென்னை மேயர் பிரியா ராஜன் தகவல்

வருமானம் குறைவான அம்மா உணவகங்களை மூட நடவடிக்கை? சென்னை மேயர் பிரியா ராஜன் தகவல்

பிரியா ராஜன்

பிரியா ராஜன்

சென்னையில் அம்மா உணவகம் ரூ. 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நாளொன்றுக்கு ரூ. 500க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை  மூட வேண்டும் என சென்னை மாமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்து முடித்த பின் முடிவெடுக்கப்படும் என மேயர் பிரியா ராஜன்  தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் 2வது நாளாக மேயர் பிரியா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அந்த கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்பொது அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் சென்னையில் அம்மா உணவகம் ரூ. 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு ரூ. 500க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மேயர் பிரியா ராஜன், அதில் குறிப்பிட்டுள்ள சில அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதுவரையில் அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.

First published:

Tags: Amma Unavagam, Chennai Mayor, Mayor Priya