ஹோம் /நியூஸ் /சென்னை /

மழைநீர் வடிகால் பணிகளுக்கு இன்று இரவுக்குள் இரும்பு தடுப்பு.. சென்னை மாநகராட்சி அவசர உத்தரவு..

மழைநீர் வடிகால் பணிகளுக்கு இன்று இரவுக்குள் இரும்பு தடுப்பு.. சென்னை மாநகராட்சி அவசர உத்தரவு..

பத்திரிக்கையாளர் விழுந்த பள்ளம்

பத்திரிக்கையாளர் விழுந்த பள்ளம்

இன்று இரவுக்குள் அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகள் நிறுவி அதனை புகைப்படமாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்து பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறந்ததன் எதிரொலியாக, கட்டுமான பணிகளுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

  சென்னை காசி திரையரங்கம் அருகே தோண்டப்பட்டு இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கினார்.

  இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தடுப்புகள் இன்றி உள்ளன.

  மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கும் போதே,  சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த், பணி ஆரம்பம் முதல் முடியும் இடம் வரை இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ஒப்பந்தர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் இன்று இரவுக்குள் அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகள் நிறுவி அதனை புகைப்படமாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் இந்த உயிரிழப்பை ஒரு முக்கியத்துவமாக எடுத்துக் கொண்டு அனைவரும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் துணை ஆணையர் பிரசாந்த் வலியுறுத்தி உள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, Chennai corporation