Home /News /chennai /

சென்னை மாநகராட்சி மேயராக 150 நாட்கள்- அனுபவம் பகிர்ந்த மேயர் ப்ரியா

சென்னை மாநகராட்சி மேயராக 150 நாட்கள்- அனுபவம் பகிர்ந்த மேயர் ப்ரியா

Youtube Video

சென்னை மேயராக பதவியேற்றப் பிறகு கல்விக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகராட்சி மேயராக இளம்பெண் ப்ரியா இருந்துவருகிறார். அவர் மேயராக பதவியேற்று இன்றுடன் 150 நாட்கள் ஆகிறது. சென்னை மாநகராட்சியின் இளம் மேயராக பதவியேற்ற பெருமையைக் கொண்டவர் அவர். சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்று 150 நாட்கள் செய்த பணிகள் குறித்தும் மாநகராட்சி செயல்பாடுகள் அவரிடம் நம்முடைய செய்தியாளர் சிறப்பு நேர்காணல் செய்தார்.

    அப்போது அவர், ‘சென்னையில் 80 இடங்களில் சென்னை மாநகராட்சி மூலம் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது, தியாகராய நகரில் பாண்டி பாஜாரில் மட்டும் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். ஏனென்றால் அந்த இடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. எல்லாரும் சாலையோரத்திலேயே வாகனத்தை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    வேறு இடங்களில் வாகன நிறுத்த இடம் இருந்தாலும் சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்த விரும்புகிறார்கள். எனவே, அதனை ப்ரீமியம் நிறுத்தமாக கருதி நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக விதித்துள்ளோம்.

    கொரோனா தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும், பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. எனவே, முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்திவருகிறோம். சென்னையில் மொத்தமாக 1,030 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4,070 கோடி மதிப்பீல் மாநகராட்சியில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

    அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டதாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

    மேயர் பதவியேற்று 150 நாட்களில் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். தற்போது என்னால் மேலாண்மை செய்ய முடிகிறது. கல்வி சார்ந்து நான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்து தெரிந்துகொள்ள என்.ஜி.ஓ மூலம் அந்தப் படிப்பையும் கற்றுக்கொள்ள முயற்சித்துவருகிறோம்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai corporation

    அடுத்த செய்தி