பொது கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கை. இந்நிலையில், 24 மணி நேரமும் சுத்தமான கழிவறையை உறுதிபடுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
சென்னையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி நந்தினி கூறுகையில், பொது இடங்களில் தூய்மையான டாய்லெட் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று . ஆனால் பொது இடங்களில் பல நேரம் டாய்லெட் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, செய்வது அறியாது மன உளைச்சலில் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளதாக சென்றுள்ளேன். குறிப்பாக மாதவிடாய் நாட்களில், கழிவறை தேடி அலையும் அவஸ்தையை சொல்ல வார்த்தைகளே இல்லை", என ஆதங்கத்தை பதிவு செய்தார்.
பொது இடங்களில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவறைகள், முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படுத்த உகந்ததாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் மற்றும் தேனாம்பேட்டை அகிய மண்டலங்களில் உள்ள 883 பொதுக் கழிப்பறைகளை தனியார் அமைப்புகள் பராமரிக்கும் பணியை மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளன. ஷிப்ட் அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்கிறார் மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி.
"இதற்கான பராமரிப்பு செலவை மாநகராட்சி வழங்கும் என்றும், பொதுமக்கள் கழிப்பறைகளை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். ராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள கழிவறைகளை பராமரிக்கும் பணியை தனியார் அமைப்புகள் துவக்கிய பிறகு, இதற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பை பொறுத்து, மற்ற மண்டலங்களிலும் விரிவுபடுத்தபட உள்ளது. மேலும், பழுதடைந்த கழிவறைகள் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக நவீன முறையிலான கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
Also Read: சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - மாநகராட்சி விளக்கம்
சில கழிவறைகளை மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்தும் பணியையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்தக் கழிப்பறைகளிலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 533 கழிப்பறைகளில் QR code அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தலாம்," என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி.
அதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட 528 கழிப்பறைகளில், 295 கழிப்பறைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில்,165 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. 68 இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai corporation, Tamil News, Toilet, Toilet Clean