சென்னையில் கட்டுமானப்பணிகளில் விதிமீறல்கள் நடப்பதாக கூறி 2,665 கட்டிடங்களின் பணிகளை நிறுத்த குறிப்பானை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெற்று அதற்கு மாறாக விதிமுறைகளை மீறிக் கட்டிய கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியால் குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதாலும், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இதன்படி, சென்னையில் 2,403 கட்டிடங்களை சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 39 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.