Home /News /chennai /

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் வசூல்

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் வசூல்

கொரோனா

கொரோனா

சென்னையில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 21 பேரிடமிருந்து 60,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேபோல, தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் தற்போது எட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

    அதனால், மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்திவருகிறது மாவட்ட நிர்வாகம். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
    சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து சுமார் 60,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று(06.07.2022) முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939ன்படி ரூ.500/- அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் 3,000-ஐ நெருங்கும் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு

    அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் இன்று (06.07.2022) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.60,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி