முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ்

உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பாஸ்

உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பாஸ்

Chennai Corporation Meeting | க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சட்டமன்ற பேரவை மற்றும் நாடாளுமன்ற மூலம் பாஸ் வழங்கப்படும். இதுபோன்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என்று ஒரு சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதனை ஏற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இன்று வாகன பாஸ் வழங்கப்பட்டது. குறிப்பாக க்யூ ஆர் கோடுடன் இந்த பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண், செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

First published:

Tags: Chennai corporation