முகப்பு /செய்தி /சென்னை / இனி கட்டடங்களை இடிக்க புதிய விதிமுறைகள் : சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

இனி கட்டடங்களை இடிக்க புதிய விதிமுறைகள் : சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே கட்டடங்களை இடிக்க அனுமதி அளிக்கப்படும்- மாநகராட்சி ஆணையர் உத்தரவு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை, அண்ணாசாலை விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே கட்டடங்களை இடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, அண்ணா சாலை அருகே ஆயிரம் விளக்குப் பகுதியில்  பயன்படுத்தப்படாத கட்டடத்தை இடிக்கும் பணியின் போது பெண் மீது கட்டட இடுபாடுகள் விழுந்ததில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கட்டடங்களை இடிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி அனைத்து பொறியியல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு :-

*கட்டடம் இடிக்கும் பணியை தொடங்குவதற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிமையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

*பேரிகார்டுகள், அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை வாசகங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

*இந்தப் பணிகளை முடித்த பிறகு கட்டடத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிக்க வேண்டும்.

*அடுத்த 3 நாட்களுக்குள் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

*பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

*அருகே உள்ள கட்டடங்கள் போன்ற சேதம் அடையாதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

*முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் கட்டடம் இடிக்கும் பணியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

*கட்டடம் இடிப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பணிகளை தொடங்கினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

First published:

Tags: Chennai, Chennai corporation