ஹோம் /நியூஸ் /சென்னை /

கடற்கரை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கடற்கரை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

Chennai Marina Beach : தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் குவிவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது இதனால் பிளாஸ்டிக்கை விற்பனை செய்பவர்கள், தயாரிப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu

சென்னையில் மெரினா உட்பட 3 கடற்கரை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று, சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை கடற்கரை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர்கள் நிச்சயம் வந்து செல்லும் இடமாக மெரினா கடற்கரை உள்லது. எனவே மாநில அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் என 28 வகையான பிளாஸ்டிக்கை விற்பனை செய்பவர்கள், தயாரிப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் குவிவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளுக்கு பிளாஸ்டிக் கொண்டுவந்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் இன்று மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் 68 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 18 கடைகளில் இருந்து  1,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இதனை கண்காணிக்க இனி காலை, மாலை என இரு வேளைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 27-07-2022 முதல் 02.08.2022 வரை ஒருவார காலத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai, Chennai corporation, Plastic Ban