ஹோம் /நியூஸ் /சென்னை /

சொத்துவரி செலுத்தவில்லையா... இந்த தேதிக்குள் செலுத்தினால் 5% சலுகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சொத்துவரி செலுத்தவில்லையா... இந்த தேதிக்குள் செலுத்தினால் 5% சலுகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் சலுகை - சென்னை மாநகராட்சி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம்.

இந்நிலையில், பொதுமக்கள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக,  2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  அது மட்டுமல்லாமல், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Chennai corporation, Property tax