ஹோம் /நியூஸ் /சென்னை /

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போட்டோவை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - சென்னையில் போலீஸ்காரர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போட்டோவை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - சென்னையில் போலீஸ்காரர் கைது

கைதான காவலர்

கைதான காவலர்

Crime News : சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரது போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட போலீஸ்காரர் கைது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “ புனித தோமையர்மலை காவல் மாவட்ட ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த 56 வயதான ஆண்ட்ரூஸ் கார்ட்வேல் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.

அந்த சமயத்தில் என்னுடைய தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஆண்ட்ரூஸ் என்னிடம் அக்கறையாக பேசினார். அவருடைய வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. தனக்கு திருமணமாகவில்லை என்றும் தனது வயதையும் குறைத்துக்காட்டி இளைஞர் போல் நாடகமாடி தன்னை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பள்ளிக்கரனை காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கூறியிருந்தார்.

அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆண்ட்ரூசை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்த பள்ளிக்கரணை போலீசார் மறுவிசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என தெரிவித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஆண்ட்ரூஸ் தலைமறைவானதால் புகார் அளித்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் புகார் அளித்த பெண்ணை கார் ஏற்றி கொலை முயற்சி செய்ததாக மேலும் ஒரு புகார் கொடுக்கபப்பது. இதுதொடர்பாக  மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூசை கைது செய்யுமாறு புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து தனிப்படையை அமைத்து கொல்கத்தாவில் பதுங்கி இருந்த ஆண்ட்ரூசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: வினோத் கண்ணன் 

First published:

Tags: Chennai, Crime News, Police, Tamil News