முகப்பு /செய்தி /சென்னை / எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!

எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

Chennai Congress Protest in SBI Bank | எல்.ஐ.சி எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் முழக்கம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற அரசு நிறுவனங்களில் அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளுக்கு  மத்திய அரசு உதவியிருப்பதாக கூறி, தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே ஜி.பி.சாலையில் உள்ள  எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். எல்.ஐ.சி எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் வலியுறுத்தினார்.

இதேபோல், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை தலைமையில், அடையாறு சாஸ்திாி நகர், எஸ்.பி.ஐ வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை சிக்னல் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பும்,தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாஸ்கர் தலைமையில், போரூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

First published:

Tags: Chennai, Congress, SBI Bank