ஹோம் /நியூஸ் /சென்னை /

சத்யாவை 2முறை கொல்ல முயன்றேன் காதலன் பகீர் வாக்குமூலம் - மகள் படுகொலையால் துக்கத்தில் தந்தை மரணம்..

சத்யாவை 2முறை கொல்ல முயன்றேன் காதலன் பகீர் வாக்குமூலம் - மகள் படுகொலையால் துக்கத்தில் தந்தை மரணம்..

சென்னை கல்லூரி மாணவி கொலை

சென்னை கல்லூரி மாணவி கொலை

Chennai Crime : கொலை செய்யப்பட்ட சத்யாவின் உடலும் மனஉளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்ட அவரது தந்தை மாணிக்கத்தின் உடலும் உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா என்கிற சத்ய ப்ரியா(20). இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1:15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போதே சத்யாவின் கையைப் பிடித்து நடைமேடை 1-ல் பீச் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார்.

ரயில் ஏறி இறங்கியதில் சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரயில் நிலையத்திலிருந்து சத்யாவின் தோழிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து கூக்குரலிட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொலை

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(32) என்பவர் காதல் பிரச்சனையில் சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து  ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படையும் மவுண்ட் காவல்துறையின் நான்கு தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

Also Read:  மாணவியை ரயிலில் தள்ளி கொலை : இளைஞர் நள்ளிரவில் கைது!

நள்ளிரவில் காதலன் கைது

இந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவு 12:30 மணியளவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதிஷிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்யாவும் சதீஷும் பல ஆண்டு காலமாக காதலித்ததும் பின்னர் சதீஷ் உடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட சதீஷின்(32) தந்தை தயாளன்(67) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட சத்யா(எ) சத்யபிரியாவும் சதீஷூம் பள்ளிப் பருவங்களில் இருந்து காதலித்து வந்துள்ளனர். பின்னர் சதீஷ் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சதீஷை விட்டு சத்யா பிரிந்து வந்துள்ளார்.

Also Read: கோலி - ரோஹித்தை திட்டியதால் கொன்றேன் - இளைஞர் கொலையில் நண்பர் பகீர் வாக்குமூலம்

கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த சதீஷ்:

சத்யா காதலை முறித்துக் கொண்டதற்கு பிறகு சதீஷ் மூன்று முறை சத்யாவுடன் சண்டை போட்டுள்ளார். வீட்டின் அருகே ஒரு முறை தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி சண்டை போட்டு உள்ளார்.

பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் ஒரு முறை தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.ஐந்து மாதத்திற்கு முன்னர் சத்யா படிக்கும் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரி வாசலில் சத்யாவின் முடியை பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

இந்த விவகாரத்தில் சத்யாவின் தந்தை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முற்பட்டு பின்னர் சதீஷின் குடும்பம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு புகார் வாபஸ் வாங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தனது தோழிகளுடன் சத்யா தி நகரில் உள்ள தான் படிக்கும் ஜெயின் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது சதீஷ் முன்னரே வந்து ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

சதீஷ் தன்னை மீண்டும் காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூற சத்யா முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் தனது தோழிகளுடன் இருந்த சத்யாவின் கையைப் பிடித்து ரயில் முன் தள்ளியுள்ளார். கொலை செய்யப்பட்ட சத்யாவின் தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

இந்த நிலையில் மகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேற்று மதியம் முதல் மீளா துயரிலிருந்து வந்த அவரது தந்தை மாணிக்கம் இன்று அதிகாலை விஷம் அருந்தி த்ற்கொலை செய்துக்கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மன உளைச்சலில்  உயிரிழந்த சத்யாவின் தந்தை மாணிக்கம் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக கொலை செய்யப்பட்ட சத்யாவுக்கு தனது உறவினர் மகனுடன் திருமணம் செய்ய தாய் - தந்தை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சதீஷ், "இரண்டு முறை சத்யாவை கொள்வதற்கு முயற்சி செய்ததாகவும் இந்த நிலையில் நேற்று ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக துரைப்பாக்கம் பகுதியில் முயற்சி செய்ததாகவும்" வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மகள் சத்யாவின் உடலும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் மிகப்பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Chennai, College student, Crime News, Tamil News