ஹோம் /நியூஸ் /சென்னை /

கல்லூரி மாணவி கொலை.. காட்டிகொடுத்த தொப்பி - இளைஞர் சிக்கியது எப்படி

கல்லூரி மாணவி கொலை.. காட்டிகொடுத்த தொப்பி - இளைஞர் சிக்கியது எப்படி

மாணவி கொலையில் கைதான சதீஷ்

மாணவி கொலையில் கைதான சதீஷ்

Chennai : கொலை செய்து விட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சியில் , கருப்பு கலர் தொப்பி அணிந்திருந்த காட்சிகள் பதிவாகிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் ரயிலில் தள்ளி மாணவியை கொன்ற கொலைகாரர் தொப்பி மூலம் போலீசிடம் சிக்கியுள்ளார்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலைய நடைமேடையில் பெண் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டார். ரயில் ஏறி இறங்கியதில் அந்தப்பெண்ணின் தலை துண்டாகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த இளைஞர் சதீஷ் என்பது தெரியவந்தது. சத்யாவும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும் சதீஷ் நடவடிக்கை சரியில்லாததால் சத்யா அவரை பிரிந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சத்யாவை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

Also Read: சத்யாவை 2முறை கொல்ல முயன்றேன் காதலன் பகீர் வாக்குமூலம் - மகள் படுகொலையால் துக்கத்தில் தந்தை மரணம்..

இந்நிலையில் கொலை செய்து தப்பியோடிய சதீஷை போலீஸார் தேடி வந்தனர். சதீஷ் தலையில் முடி கொட்டியதால், வழக்கமாக எப்பொழுதும் தொப்பி அணிந்திருப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.நேற்றும் கொலை செய்து விட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சியில் , கருப்பு கலர் தொப்பி அணிந்திருந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சதீஷை தொடர்ந்து தேடிவந்ந நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த தொப்பி அணிந்திருந்த நபரை பிடித்து விசாரித்த போது , அவர் சதீஷ் என தெரியவந்தது. நள்ளிரவில் கைதான சதீஷிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published: