ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai news : சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அருகே  கல்லூரி மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த கல்லூரி மாணவி  தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வழக்கம் போல் தந்தை காலையில் வேலைக்கு சென்று விட்டார். மதியம் தேர்வு உள்ளதால் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்

இந்நிலையில் மாலையில் வேலை முடிந்து மாணவியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பதால் அருகில் உள்ள உறவுக்கார பெண்ணை அழைத்து விசாரித்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

அப்போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியைடந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மானவியை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read:  நடிகை அனுஷ்யாவின் ஆபாச போட்டோ?.. மார்பிங் கும்பல் அட்டூழியம்.. புஷ்பா நடிகையை குறி வைத்தது ஏன்?

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் போலீசார் மாணவியின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவிக்கு தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் பிரச்சனையா இல்லை வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் :  வினோத் கண்ணன் 

First published:

Tags: Chennai, Crime News, Local News, Tamilnadu