முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி... வந்தது அரசின் புதிய அறிவிப்பு..!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி... வந்தது அரசின் புதிய அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai City Private Bus Service | சென்னையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மட்டும் இயங்கி வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகரில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட  மாநகர பேருந்துகள் இயக்கி வருகின்றன. தினசரி சுமார் 30 லட்சம் பேர் வரை இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க; கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருகிறதா? மூளைக்கு அமைதி தர இத ஃபாலோ பண்ணுங்க..!

(Gross Cost Contract) எனும் ஒப்பந்த முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளின் வரவு என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாகவே உள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நேரமும் குறையும்.

எனினும் இந்த தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இயங்குமா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒருநாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.

First published:

Tags: Chennai, MTC