சென்னைக்கு வேலைத்தேடி வரும் அப்பாவி பெண்களை குறிவைத்து சிலர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாரித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தனிப்படை குழுவினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது.
ரகசிய தகவலை தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு தனிப்படையினர் கடந்த 21.01.2023 அன்று துரைப்பாக்கம், சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சம்மந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய தரகர்கள் திருவேற்காடு, முத்துமாலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கணேஷ் (வயது 22), தஞ்சாவூரை ராஜபிரதாப் (வயது 24), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அமிர்பாபு(எ)ஹலாம் மற்றும் மொனிர் உசேன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரூ.30,000க்கு ஆக்டிவா.. இளம்பெண்ணுக்கு ஆசைக்காட்டி மோசடி - அதிர வைக்கும் சைபர் க்ரைம்
கைதானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வைத்திருந்த 8 வெளிமாநில பெண்கள் உட்பட 9 பெண்களை தனிப்படையினர் மீட்டனர். கைதான 4 பேரிடமிருந்து 3 செல்போன்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செய்தியாளர்: வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Prostitution, Sexual issues, Tamil News