முகப்பு /செய்தி /சென்னை / பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.. சென்னையில் மேலும் 5 மண்டலங்களில் விரிவுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.. சென்னையில் மேலும் 5 மண்டலங்களில் விரிவுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்

chief minister morning breakfast scheme | தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களில் செயல்படும் பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னையில் மேலும் 5 மண்டலங்களில் விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நான்கு மண்டலங்களில் தொடங்கப்பட்டது. 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, 36 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,941 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சென்னை முழுவதும் உள்ள எஞ்சிய 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென் சென்னையில் உள்ள திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களில் செயல்படும் பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

5 பொது சமையல் கூடங்களை ஏற்படுத்தி, பள்ளிகளுக்கு காலை உணவை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

First published:

Tags: Chennai, Chennai corporation, Tamil News