முகப்பு /செய்தி /சென்னை / சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்புகள்... சைலெண்ட் ஸ்டேஷன் திட்டம் வாபஸ்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்புகள்... சைலெண்ட் ஸ்டேஷன் திட்டம் வாபஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு நாளில் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். கிட்டத்தட்ட 200 ரயில்களும் வந்து செல்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்ட்ரல் ரயில் நிலையம் சைலெண்ட் ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் அறிவிப்புகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம். ஒரு நாளில் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். கிட்டத்தட்ட 200 ரயில்களும் வந்து செல்கிறது. இந்த ரயில் நிலையம் சில நாட்களுக்கு முன் சைலெண்ட் ரயில் நிலையமாக மாற்றப்பட்டது.

ரயில் நிலையம் என்று சொன்னதும், “ பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்னை முதல் டெல்லி செல்லும் ரயில் 123456 பிளாட்பாரம் எண் 8 இல் புறப்பட தயாராக உள்ளது..” என்பது போன்ற வார்த்தைகள் தான் நினைவிற்கு வரும். ஒவ்வொரு ரயில் வரும்போதும் கிளம்பும் போதும் அதுகுறித்த அறிவிப்புகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ரயில் நிலையத்தில் ஒலிக்கும் இந்த சத்தங்கள் இல்லாமல் இருப்பது தான் சைலண்ட் ரயில் நிலையம். ரயில்கள் குறித்த அறிவிப்புகள் பெரிய டிஜிட்டல் திரைகளை ரயில் நிலையம் முழுவதும் அமைத்தனர். அதில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும். அதை பார்த்து பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து சனிக்கிழமை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஞாயிறு முதல் ஒலி வடிவில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வராது என்றும், ரயில்கள் குறித்த அனைத்து தகவல்களும் வரும் காட்சிப் பலகைகளும் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ளார். அதோடு பயணிகள் வசதிக்காக விசாரணைச் சாவடிகளில் போதுமான பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பார்வை குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கு உதவ, ரயில் நிலையம் இப்போது அதன் பிரதான நுழைவாயிலில் பிரெய்லி வரைபடங்களை நிறுவப்பட்டது. அது மட்டும் இல்லாமல் நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கும் சைகை மொழி வீடியோவை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க QR குறியீடுகள் ரயில் நிலையம் முழுவதும் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆடியோ அறிவிப்பு வசதி உடனடியாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. மார்ச் 6ம் தேதி முதல்  மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ரயில் நிலையத்தில் அறிவிக்கப்படும் ஆடியோ அறிவிப்புகள்  அதிக சத்தம் எழுப்புவதாக பயணிகள் புகார்கள் அளித்ததால் ‘சைலெண்ட் ஸ்டேஷன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த ஆடியோ வசத் சரிசெய்யப்பட்ட நிலையில், மீண்டும் அந்த சேவை தொடங்கப்படுகிறது. இந்நிலையில் ‘சைலெண்ட் ஸ்டேஷன்’ அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது” என தெரிவித்தனர்.

First published:

Tags: Chennai, Railway Station