முகப்பு /செய்தி /சென்னை / ஆளுநரை கண்டித்து தீர்மானம் : சென்னை மாமன்ற கூட்டத்தில் மதிமுக வைத்த கோரிக்கை

ஆளுநரை கண்டித்து தீர்மானம் : சென்னை மாமன்ற கூட்டத்தில் மதிமுக வைத்த கோரிக்கை

ரிப்பன் மாளைகையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டம்

ரிப்பன் மாளைகையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டம்

Chennai Corporation Meeting| தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக கவுன்சிலர் ஜீவன், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு எனும் பெயரை உச்சரிக்க மறுத்தும், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயரையும்  சட்டபேரவையில் சொல்ல மறுத்த ஆளுநரை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஆளுநர் அவையில் இருந்தபோதே சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16அடி பாய்ந்து நிருபித்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்த ஜீவன், தமிழ்நாட்டை சீண்டிப்பார்க்கவே பயம் வர சூழலை கொண்டு வர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்றக் கூட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல், ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை சென்னை மாமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகர், விசிக உறுப்பினர் அம்பேத்வளவன் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பதிலளித்த மேயர் பிரியா, சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநருக்கு எதிராக மாநகராட்சி மாமன்றகூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மேயர் பிரியா தகவல் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai corporation, Mayor Priya