ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. ஜனவரியை கோலாகலமாக கொண்டாடும் தலைநகரம்!

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. ஜனவரியை கோலாகலமாக கொண்டாடும் தலைநகரம்!

சென்னை திருவிழா

சென்னை திருவிழா

Chennai Book fair | சென்னை மக்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சென்னையில் திருவிழா வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை மக்களுக்கு ஜாக்பாட்டாக புத்தக கண்காட்சி, பொருள்காட்சி, சென்னை சங்கமம் ஆகியவை இந்த வாரத்தில் தொடங்கவுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்கிறார்.

இதே போன்று, இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் போனது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது.இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” அரசு சார்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார்.

First published:

Tags: Chennai, Chennai book fair