ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை புத்தக கண்காட்சியில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு.. கவனம் ஈர்த்த காவல்துறையின் முன்னெடுப்பு!

சென்னை புத்தக கண்காட்சியில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு.. கவனம் ஈர்த்த காவல்துறையின் முன்னெடுப்பு!

புத்தக காட்சி

புத்தக காட்சி

அரங்கிற்கு தினந்தோறும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து QR கோடை ஸ்கேன் செய்து பயன்பெற்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

46வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. 1000 அரங்குகள் கொண்ட இந்த புத்தகக் கண்காட்சியில் மொத்தமாக 15 லட்சம் பொதுமக்கள் வந்திருந்ததாகவும் ரூபாய் 16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் பபாசி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டுகள் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பொது மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில் சைபர் கிரைம் குற்றங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்காக இந்த புத்தக கண்காட்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டது சென்னை காவல்துறை.

புத்தகக் கண்காட்சியில் சென்னை காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவுக்கென தனி அரங்கு ஒதுக்கப்பட்டு அதில் "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற புத்தகம் குறித்து பொதுமக்களுக்கு கடந்த 17 நாட்களாக சென்னை காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததுள்ளனர்.

சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பிரிவு கடந்த 2022 டிசம்பர் தேதி "முத்து முப்பது திருடர்களும்" என்ற சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டது.

இந்த புத்தகத்தில் URL இணைப்பு மூலமாக மோசடி, மின் கட்டண மோசடி, பான், ஆதார், கே.ஒய்.சி புதுப்பித்தல், கடன் செயலிகள் மூலம் மோசடி, அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி, சிம் கார்டு துண்டிப்பு மோசடி, அமேசான், பிளிப்கார்ட் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி, வீடியோ கால் அழைப்பு மூலம் பணப்பறிப்பு மோசடி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு மோசடி, வெளிநாட்டிற்கு ஆயில் ஏற்றுமதி மோசடி உள்ளிட்ட 30 சைபர் குற்றங்கள் எப்படி நடைபெறும் அதிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விரிவாக எழுதப்பட்டிருந்தது.

இதன் நோக்கமானது பொதுமக்கள் அனைவருக்கும் சைபர் குற்றங்களிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே என்று சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் "முத்துவும் 30 திருடர்களும்" என்ற புத்தகத்திற்கான அரங்கில் சைபர் கிரைம் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கென விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக QR கோடில் புதிது புதிதாக பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்து சென்னை காவல்துறை அப்டேட் செய்து வருவதையும், அந்த QR கோடை ஸ்கேன் செய்து அவற்றின் மூலம் என்னென்ன வகையான சைபர் குற்றங்களிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்பது குறித்து போலீசார் தொடர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த அரங்கிற்கு தினந்தோறும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஆர்வமாக சைபர் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் QR கோடை ஸ்கேன் செய்து பயன்பெற்றனர். 17 நாட்களில் 1500 க்கும் அதிகமான நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர்களது மொபைலில் QR கோடை ஸ்கேன் செய்து கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பதிவிறக்கம் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai book fair, Chennai Police, Cyber crime