Home /News /chennai /

திருடும் போது விபத்தில் காலை இழந்த கொள்ளையன்.. கட்டை கால் வைத்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு கைது

திருடும் போது விபத்தில் காலை இழந்த கொள்ளையன்.. கட்டை கால் வைத்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு கைது

சென்னையில் பைக் திருடும் கட்டை கால் ஆசாமி கைது

சென்னையில் பைக் திருடும் கட்டை கால் ஆசாமி கைது

Chennai | சென்னையிலுள்ள ரயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் பார்க்கிங் அல்லாமல் வெளியே நிறுத்தும் இருசக்கர வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மணிகண்டன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை ராயப்பேட்டைப் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கால்களை தாங்கியப்படி ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில்  திருவல்லிகேணி பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான மணிகண்டன் (எ) திக்குவாய் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டின் அருகே வைத்து மணிகண்டனை ராயபேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்த ராயப்பேட்டை போலீசார் மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐஸ் அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி விட்டு தப்பியோடும் போது மாநகர அரசு பேருந்தில் சிக்கி வலது கால் நசுங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 8 மாதகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது கால் முட்டிக்கு கீழே அகற்றப்பட்டு கட்டை கால் பொறுத்தப்பட்டது.  இந்த நிலையில் உடல்நிலை சற்று தேறியதும் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் ஈடுப்பட தொடங்கியிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக சென்னையிலுள்ள ரயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் பார்க்கிங் அல்லாமல் வெளியே நிறுத்தும் இருசக்கர வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்ட மணிகண்டன், இருசக்கர வாகனங்களை திருடி அவற்றை புரோக்கர் மூலமாக புதுப்பேட்டை பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.

Also see... மதுரை ராஜாஜி மருத்துவமனை: தரையில் படுக்க வைத்து சிகிச்சை

மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் திருவல்லிக்கேணி, ராயபேட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், ஒரக்கடம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Bike, Bike Theft, Chennai, Crime News

அடுத்த செய்தி