ஹோம் /நியூஸ் /சென்னை /

அயனாவரம் பிரியாணி கடை உரிமையாளர் கொலை.. 5 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

அயனாவரம் பிரியாணி கடை உரிமையாளர் கொலை.. 5 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Ayyanavaram case | சென்னை அயனாவரம் பகுதியில் பிரியாணி கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நாகூர் கனி (34) என்ற நபரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அயனாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நீலாங்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23), கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரதீப்(24), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிம் ஜிலான் (25), வடபழனியை சேர்ந்த அகஸ்டின் (27,. ஓட்டேரி பகுதியை சேர்ந்த சரண்குமார்(23) ஆகிய ஐந்து பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த காரணத்தினாலும் கொலை குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினாலும், இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

Also Read : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு.. ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

அதனை ஏற்று நேற்று காவல் ஆணையர் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து தற்போது சிறையில் உள்ள 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

First published:

Tags: Chennai, Crime News, Gundas Act, Local News