முகப்பு /செய்தி /சென்னை / குடிபோதையில் நண்பரை கொன்று சடலத்துடன் 2 நாள்கள் தங்கியிருந்த கொடூரம் - ஆட்டோ டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

குடிபோதையில் நண்பரை கொன்று சடலத்துடன் 2 நாள்கள் தங்கியிருந்த கொடூரம் - ஆட்டோ டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை

கொலை

இரவில் மது குடிக்கும் போது  குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த முருகன் சுத்தியலால் சுரேஷின் பின் மண்டையில் அடித்து கொலை செய்து விட்டு இரண்டு நாட்களாக அந்த அறையிலேயே தங்கி இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Tiruverkadu

திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்த நபர் போலீசில் தானாக சரணடைந்தார்.

சென்னை திருவேற்காடு அருகே காடுவெட்டி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் முருகன்(42). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று  அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்றார். குடிபோதையில் இருந்த அவரை அங்கு பணியில் இருந்த அம்பத்தூர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது தனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில் அவர் அம்பத்தூர், பட்டரவாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(42), என்பதும், அவர் முருகன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததும் தெரியவந்தது.

இரவில் மது குடிக்கும் போது  குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த முருகன் சுத்தியலால் சுரேஷின் பின் மண்டையில் அடித்து கொலை செய்து விட்டு இரண்டு நாட்களாக அந்த அறையிலேயே தங்கி இருந்ததாகவும் தற்போது கொலை செய்யப்பட்ட சுரேஷின் உடலை அப்புறப்படுத்த முடியாததால் முருகன் போலீசில் சரணடைய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | மகளின் கள்ளக்காதலுக்கு தடை.. மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார் - நாமக்கலில் அரங்கேறிய கொடூரம்

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த சுரேஷின் சடலத்தை மீட்டு, முருகனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சோமசுந்தரம்

First published:

Tags: Chennai, Crime News, Dead body, Murder