ஹோம் /நியூஸ் /சென்னை /

3 வயசுல அம்மா ரத்தத்தை ரோட்ல பார்த்தேன் - பேருந்து படியில் தொங்கிய மாணவர்களுக்கு உதவி கமிஷனர் அட்வைஸ்

3 வயசுல அம்மா ரத்தத்தை ரோட்ல பார்த்தேன் - பேருந்து படியில் தொங்கிய மாணவர்களுக்கு உதவி கமிஷனர் அட்வைஸ்

Chennai | அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கண்டறிந்து போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் பஸ்ஸில் தொங்கியபடி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சென்றனர். அப்படி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்தவர்களை அங்கு பணியில் இருந்த பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம் மற்றும் ஆய்வாளர் சாம்சுந்தர் தலைமையிலான போலீசார் பஸ்சை மடக்கி பிடித்தனர்.

  பின்னர் பேருந்தில் தொங்கியபடி வந்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, “ என் மூன்று வயதில் எனது தாய் விபத்தில் சிக்கிய போது அவரது ரத்தத்தை சாலையில் பார்த்ததாகவும் அவர் இறந்து விட்டதாகவும் கூறினார்.

  பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் அனாதை, அவர்களுக்கு பெற்றோர் இல்லை என்றால் பிள்ளைகள் அனாதை ஆகிவிடுவார்கள். மனித உயிர் விலைமதிப்பற்றது. இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடக் கூடாது” என உதவி கமிஷ்னர்  அறிவுரை  வழங்கினார்.

  Also see... மாணவர்களுக்கு வெற்றி அடையும் வழியை கூறிய பிடிஆர்

  மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் அடையாள அட்டைகளை பெற்று கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அவர்கள் குறித்த தகவல்களை தெரிவித்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, School student