Home /News /chennai /

சென்னை வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் வீட்டில் சிக்கிய 3 கிலோ தங்கம்

சென்னை வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் வீட்டில் சிக்கிய 3 கிலோ தங்கம்

சென்னை வங்கி கொள்ளை சம்பவம்

சென்னை வங்கி கொள்ளை சம்பவம்

Crime : சென்னை அரும்பாக்கத்தில் வங்கி கொள்ளையில் காவல் ஆய்வாளர் அமல்ராஜுக்கு தொடர்புள்ள நிலையில், அவரது மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து மூன்றரை கிலோ நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையர்களிடம் இருந்து அவர் நகைகளை பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், அமல்ராஜின் மனைவி இந்திராவிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை கும்பலுக்கும், காவல் ஆய்வாளருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, அரும்பாக்கம் வங்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையரை போலீசார் கைது செய்தனர். கொள்ளை நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமாரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Also Read: பிரபல பைனான்சியர் வெட்டிப்படுகொலை.. சாவகாசமாக பைக்கில் தப்பிச்சென்ற குற்றவாளிகள் - வேளாங்கண்ணியில் பதற்றம்

    இதையடுத்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த திங்கட்கிழமையும், சூர்யா என்பவரை செவ்வாய்கிழமை அன்றும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



    கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்வதற்கு செந்தில் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bank, Chennai, Chennai Police, Crime News

    அடுத்த செய்தி