ஹோம் /நியூஸ் /சென்னை /

டீ கொடுக்க லேட்.. ஆத்திரத்தில் கொதிக்கும் பாலை டீ கடைக்காரர் மீது தள்ளிவிட்ட நபர்!

டீ கொடுக்க லேட்.. ஆத்திரத்தில் கொதிக்கும் பாலை டீ கடைக்காரர் மீது தள்ளிவிட்ட நபர்!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai | டீ கடையில் நீண்ட நேரமாக கேட்டும் டீ கொடுக்காததால் ஆத்திரத்தில் பாலை தள்ளிவிட்டதாக வாக்குமூலம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில் டீ கொடுக்க தாமதமானதால் கொதிக்கும் பாலை கடையில் வேலை செய்தவர் மீது தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(26) அதே பகுதியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த டீக்கடைக்கு வந்த செல்வம்(54) என்பவர் டீ வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது கடைக்காரர் டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் செல்வம் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பாலை வேல்முருகன் மீது தள்ளிவிட்டார்.

இதில் வேல்முருகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலை தள்ளிவிட்ட செல்வத்தை கைது செய்தனர்.

First published:

Tags: Arrest, Chennai, Fight, Tea shop owner attacked