Home /News /chennai /

ரூ.1 கோடி மதிப்பிலான ரத்தின கற்கள் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தல்.. சிக்கும் முக்கிய நபர்

ரூ.1 கோடி மதிப்பிலான ரத்தின கற்கள் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தல்.. சிக்கும் முக்கிய நபர்

நவரத்தின கற்கள் கடத்தல்

நவரத்தின கற்கள் கடத்தல்

மொத்தம் ஆயிரத்து 746 ரத்தின கற்களை விழுங்கி கடத்தி கொண்டு வந்திருந்தார். இந்த ரத்தின கற்கள் 8309 காரட் உடையதாகவும் இருந்தது.

    ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களை இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த நபர் போலீஸில் சிக்கினார். இந்த கடத்தலில் முக்கிய நபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக் கிழமை வந்தது. விமானத்தில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இலங்கையைச் சேர்ந்த நைமுதீன் என்ற பயணி,சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னை வந்திருந்தார். அவரிடம் விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    அவரை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்த போது, அவர் வயிற்றுக்குள் பெரிய கற்குவியல்கள் இருப்பது தெரிந்தது. அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் விழுங்கி வந்தவைகளை சிறிது சிறிதாக வெளியில் எடுத்தனர்.

    இதையும் படிங்க: அக்கா, தம்பி எனக்கூறி ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை.. கொலையில் முடிந்த சோகம்!

    ஆய்வில் அவை அனைத்தும் விலை உயர்ந்த முதல் தரமான ரத்தின கற்கள் என்பது தெரியவந்தன. மொத்தம் ஆயிரத்து 746 ரத்தின கற்களை விழுங்கி கடத்தி கொண்டு வந்திருந்தார். இந்த ரத்தின கற்கள் 8309 காரட் உடையதாகவும் இருந்தது.

    ரத்தின கற்களின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைமுதீனிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிலரது பெயர்களை கூறினார்.ரத்தின கற்கள் கடத்தலில் சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் சிக்கியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Airport, Smuggling

    அடுத்த செய்தி