ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்

சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்

புதிய வாகன நிறுத்தத்தின் நுழைவாயிலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை விமான நிலையத்தில் பல்லடுக்கு வாகனம் நிறுத்தும் மையத்தில் டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்திற்குள் வாகனங்களுக்கு நுழைவு வாயில் அருகே டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தமிழக அரசின் எதிர்ப்பால் கோவை ஈஷா மையத்தில் நடக்கவிருந்த ஜி-20 நிகழ்ச்சி ரத்து: நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 அதிகாலை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் அதிக விமான சேவைகள் இருக்கும் என்பதால், வாகனங்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் புதிய வாகன நிறுத்தத்தின் நுழைவாயிலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், டோக்கன் பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

First published:

Tags: Chennai Airport, Traffic