ஹோம் /நியூஸ் /சென்னை /

மாண்டஸ் புயல் எதிரொலி : 2வது நாளாக முடங்கிய விமான சேவை.. 19 விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் எதிரொலி : 2வது நாளாக முடங்கிய விமான சேவை.. 19 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

நேற்று நள்ளிரவு வரையில் 9 விமானங்களும், அதன் பின்பு இன்று அதிகாலை வரையில் 5 விமானங்களும் ஆக மொத்தம் 14 விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத் திரும்பிச் சென்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக இன்று 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கிய நேற்று இரவில் இருந்து, இன்று அதிகாலை வரை, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 14 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதில் நேற்று நள்ளிரவு வரையில் 9 விமானங்களும், அதன் பின்பு இன்று அதிகாலை வரையில் 5 விமானங்களும் ஆக மொத்தம் 14 விமானங்கள் இதேபோல் பெங்களூர், ஹைதராபாத் திரும்பிச் சென்றன. சிங்கப்பூர்,இந்தூர், மும்பை, துபாய், தோகா ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.

அதன் பின்பு இன்று அதிகாலையில் இருந்து, அந்த விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வர தொடங்கியுள்ளன.

இன்று இரண்டாவது நாளாக மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூர், ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்டாஸ் புயல் தாக்கம் காரணமாக இதை போல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

First published:

Tags: Chennai Airport, Chennai rains, Cyclone Mandous