சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக 135 உயரத்தில் பிரமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே அவசர தகவல் பரிமாற்றத்துக்காக, கடந்த ஓராண்டாக அனலாக் அலைவரிசை முறையில் வாக்கிடாக்கி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதில் அவ்வப்போது சிக்னல் கிடைக்காமலும், இரு தரப்பினரிடையே பேசுபவர்களின் குரல் தெளிவின்றி இருப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், இது மிகவும் குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனால் இந்திய விமானநிலைய ஆணையத்துக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் டிஎம்ஆர் எனும் ‘டிரங்க்ட் ரேடியோ சேவை’என்ற நவீன டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக, சென்னை விமானநிலைய வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில், புதிதாக 135 அடி (40 மீட்டர்) உயரத்தில், டிஜிட்டல் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப சேவை சென்னை விமான நிலையத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் இந்த அதிநவீன தகவல் தொழில்நுட்ப கோபுரம் செயல்பாட்டுக்கு வந்ததும், விமான நிலையத்தை சுற்றியுள்ள 6 கிமீ தூரம் வரை வாக்கிடாக்கி சேவைகளை செயல்படுத்த முடியும். இது, ‘டெட்ரா’ எனும் ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் புதிய தொலைத்தொடர்புதுறை சேவை இருக்கும்.
இதனால் விமானம் தரையிறங்குதல், புறப்படுதல் பகுதியில் ஓடுபாதை பணியில் உள்ள கிரவுண்ட் ஸ்டார்கள், ஒரே நேரத்தில் விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளால் பயன்படுத்த முடியும். இதுதவிர, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே நடைபெறும் வாக்கிடாக்கி பேச்சுகளை வேறு யாரும் ரகசியமாக ஒட்டுக் கேட்க முடியாது. இந்த இணைப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக மத்திய தகவல்தொடர்பு துறையின் அனுமதி பெறவேண்டியது இல்லை.
இந்திய விமான நிலைய ஆணையமே இணைத்துவிடும். சென்னை விமானநிலையத்தில் புதிய தகவல் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்ததும் விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவை மேம்படுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Airport