தீபாவளி தினத்தன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையின் காற்று மாசு அளவு அதிகரித்து காற்றின் தரம் மிகவும் மோசமாகியுள்ளது என சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீபாவளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசுகள் அளவாக வெடிக்க தமிழ்நாடு அரசு நேர கட்டுப்பாடுகளை விதித்திருந்தது . அந்த வகையில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதாவது 1 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் 1 மணி நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு அளவு அதிகரித்தது.
பெருங்குடி - 252
ராயபுரம் - 205
மணலி - 201
ஆலந்தூர் - 191
எண்ணூர் - 171
குறிப்பாக சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம், தி.நகர் கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, ராயப்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், அமைந்தகரை, சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியான முகப்பேர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வெடிகளை வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து மிகவும் அதிகப்படியான காற்று ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Chennai, Diwali