முகப்பு /செய்தி /சென்னை / சென்னை வங்கிக்கொள்ளை.. 10நாள் திட்டம்.. சிக்கிய மேனேஜர் - நடந்தது என்ன?

சென்னை வங்கிக்கொள்ளை.. 10நாள் திட்டம்.. சிக்கிய மேனேஜர் - நடந்தது என்ன?

சென்னை வங்கி கொள்ளை

சென்னை வங்கி கொள்ளை

Crime : வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட6 நபர்களும் பள்ளியில் ஒன்றாக படித்த நபர்கள் எனவும் கொள்ளையர்கள் மூன்று கைப்பைகளில் தங்க நகைகளை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Last Updated :

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலைப் பகுதியில் ஃபெடரல் வங்கியின்  கோல்டு லோன் வங்கி கிளையான ஃபெட் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 13ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் கொள்ளை சம்பவம் நடந்தேறியது. அந்த வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த கஸ்டமர் டெவலப்பிங் மேனேஜர் முருகன் என்பவர் தனது நண்பர்களோடு உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினார்.

வங்கி  காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து வங்கி மேலாளர் சுரேஷ் மற்றும் வங்கி ஊழியர் விஜயலட்சுமி ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வங்கி லாக்கரை உடைத்து ரூபாய் 15 கோடி மதிப்பிலான 31.7 கிலோகிராம் தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பாடி படவேட்டம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன், அவரது நண்பர்களான வில்லிவாக்கம் மண்ணடி தெருவைச் சேர்ந்த பாலாஜி(28), வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள் போலீசார் மீட்டனர்.மீட்கப்பட்ட தங்க நகைகளை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்த்துறையினர் மீடியா டிஸ்ப்ளே வைத்தனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்.,  மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்டு பின் வழக்கின் தன்மை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “ கடந்த 13-ம் தேதி அரும்பாக்கத்தில் வங்கியில்  31.7 கிலோ கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also Read:  சென்னை ஏர்போர்டில் பெண்களை குறிவைத்து மோசடி - இலங்கையை சேர்ந்த இருவர் கைது

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட வங்கியில் பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வங்கியில் பணிபுரிந்து வந்ததாகவும் தனது நண்பர்களோடு 10 நாட்களாக வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.இந்த கொள்ளை விவகாரத்தில் மீதம் 3 நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை விரைவாக கைது செய்து மீதமுள்ள நகைகளை மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு நபர்களும் பள்ளியில் ஒன்றாக படித்த நபர்கள் எனவும் கொள்ளையர்கள் மூன்று கைப்பைகளில் தங்க நகைகளை எடுத்துச் சென்றதாகவும் பாதியை சென்னையில் வைத்துவிட்டு மீதி நகைகளை தங்களோடு எடுத்து சென்றதாகவும் அவற்றில் இரண்டு பைகளில் இருந்த 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மீட்கப்பட்ட கூல்டிரிங்க்ஸில் மயக்கம் மருத்து கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Bank Locker, Chennai, Crime News, Gold Theft