முகப்பு /செய்தி /சென்னை / மின்சாரம் தாக்கி பலியான நபர்... குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்!

மின்சாரம் தாக்கி பலியான நபர்... குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்!

உயிரிழந்த நபர்

உயிரிழந்த நபர்

Ecr electric shock death | அடுத்தடுத்து மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு நபர் மற்றும் ஒரு நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் 40-வயது மதிக்கத்தக்க முகமது இஸ்மாயில். இவர், தனது மகன், மகளை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சார வயர் அறுந்து இஸ்மாயில் மீது விழுந்துள்ளது. இதில் அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் சாலையில் சென்ற நாய் மீது மின்சாரம் பாய்ந்து நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.

அதே நேரம் ஒரு டாட்டா ஏசி வாகனத்திலும் மின் வயர் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக டாட்டா ஏசி ஓட்டுனர் உயிர்தப்பினார்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவிந்து சடலத்தை சுற்றி நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்ட பாடில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.

First published:

Tags: Chennai, Crime News, Death