ஹோம் /நியூஸ் /சென்னை /

புது வீட்டுக்கு கோழியை பலி கொடுக்க சென்ற முதியவர் மரணம் - கண் திருஷ்டி கழிக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

புது வீட்டுக்கு கோழியை பலி கொடுக்க சென்ற முதியவர் மரணம் - கண் திருஷ்டி கழிக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னையில் முதியவர் பலி

சென்னையில் முதியவர் பலி

லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pallavaram, India

    பல்லாவரம் அருகே புதிய வீட்டிற்கு பலி கொடுக்க வாங்கி வந்த கோழி பறந்த சென்ற போது துரத்திப் பிடிக்கச் சென்ற முதியவர் பள்ளத்தில் தவறி விழுந்து பலி

    சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டபட்டு அதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது.  இந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது-70) என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ராஜேந்திரன்  திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த கோழி பறந்து சென்றது அதை பிடிக்க துரத்தியபோது கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Also Read:  தங்க நகையை பாலிஷ் செய்வதாக கூறி ஆசிட்டில் கரைத்த வடமாநில இளைஞர்... பதறிய பெண்கள் - நடந்தது என்ன?

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: சுரேஷ்

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Buildings, Chennai, Pallavaram, Tamil News