சென்னையில் பொங்கல் கொண்டாடத்தையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 376 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் சென்னை பெருநகர காவல், 12 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.
காவல் குழுவினர் நேற்று (15.01.2023) இரவு, 5,904 வாகனங்களை சோதனை செய்து, இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய (Drunken Drive) குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது 378 வழக்குப்பதிவு செய்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் (Without Helmet), வாகனங்களும்இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் (Triples Ride), இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் (Over Speed & Dargerous Drive) போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு. மொத்தம் 538 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதே போன்று அடுத்த இரண்டு நாட்களுக்கும் சட்டம் & ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் தொடர்ந்து மேற்கண்டவாறு வாகன தணிக்கைகள் மேற்கொண்டு. போக்குவரத்து விதி மீறங்களில் ஈடுபடுவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கடுமையாக எச்சரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Pongal 2023