ஹோம் /நியூஸ் /சென்னை /

போதையில் ஆண் நண்பருடன் காரை தாறுமாறாக ஓட்டிய பெண்.. மடக்கி பிடித்த போலீசாரை கன்னத்தில் அறைந்துவிட்டு எஸ்கேப்!

போதையில் ஆண் நண்பருடன் காரை தாறுமாறாக ஓட்டிய பெண்.. மடக்கி பிடித்த போலீசாரை கன்னத்தில் அறைந்துவிட்டு எஸ்கேப்!

போலீசாரின் கன்னத்தில் அறைந்த பெண் - அவரது ஆண் நண்பர்

போலீசாரின் கன்னத்தில் அறைந்த பெண் - அவரது ஆண் நண்பர்

கார் எண்ணை ட்ரேஸ் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Chennai [Madras]

சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி வந்த பெண்ணை பரிசோதித்தபோது, ஆத்திரத்தில் அவர் போலீசாரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபோதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டி வருகிறார்களா என 'பிரித்திங் அனலைசர்' கருவி மூலம் பரிசோதித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தினர். அந்த காரை ஓட்டிய பெண்ணும், அவருடைய நண்பரும் மதுபோதையில் இருந்துள்ளதை கண்டனர்.

உடனே துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் வாயில் போதையை கண்டுபிடிக்கும் 'பிரித்திங் அனலைசர்' கருவியை வைத்து ஊத சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது மட்டுமில்லாமல், திடீரென ராமமூர்த்தி என்ற போலீசாரின் கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் அங்கு வந்த திருநங்கைகள் சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த பெண்ணும், அவருடைய ஆண் நண்பரும் அங்கிருந்து காரை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தப்பி சென்ற கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாரை தாக்கிய பெண் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் ஷெரின் பானு (48) என்பதும், அவருடன் காரில் வந்தது மும்பையை சேர்ந்த விமான நிலைய ஊழியரான விக்னேஷ் (30) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Arrest, Chennai, Crime News