ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் சேகுவேரா மகள்.. கம்யூனிஸ்ட் கட்சி அமோக வரவேற்பு.. விழாவில் பங்கேற்கும் கனிமொழி..

சென்னையில் சேகுவேரா மகள்.. கம்யூனிஸ்ட் கட்சி அமோக வரவேற்பு.. விழாவில் பங்கேற்கும் கனிமொழி..

சென்னையில் சேகுவாரா மகள் அலெய்டா குவேரா

சென்னையில் சேகுவாரா மகள் அலெய்டா குவேரா

சென்னையில் 3 நாட்கள் தங்கவுள்ள அலெய்டா குவேரா , பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சேகுவேராவின் மகளான அலெய்டா குவேரா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

புரட்சியாளராகக் கருதப்படுபவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த சே குவேரா. இவரது மகளான மருத்துவர் அலெய்டா குவேரா முதன்முறையாக சென்னை வந்தார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகள் இருபுறமும் நின்று பூங்கொத்துகளுடன் அவரை இன்முகத்துடன் வரவேற்றனர்.

சென்னையில் 3 நாட்கள் தங்கவுள்ள அலெய்டா குவேரா , பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதன் கிழமை சென்னையில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

First published:

Tags: Chennai, CPM, Kanimozhi