ஹோம் /நியூஸ் /சென்னை /

அடுத்த 3 மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்

மழை

மழை

இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ளது. இதன் காரணமாக, ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

  நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Rain Update