முகப்பு /செய்தி /சென்னை / சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமானம்- தமிழக முதல்வருக்கு மத்திய அரசு கடிதம்

சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமானம்- தமிழக முதல்வருக்கு மத்திய அரசு கடிதம்

விமான நிலையம்

விமான நிலையம்

சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்து அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதரம் நரேந்திர மோடி மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த  11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும், பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினையும் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு, தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும், தனது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 1,748 பெண்கள் விடுதிகள்- ஆர்.டி.ஐயில் கிடைத்த தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தினைப் பரிசீலித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது 2-3-2023 நாளிட்ட கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Indigo Air Service