Home /News /chennai /

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி ஜெகத் ரட்சகன்

திமுக எம்.பி ஜெகத் ரட்சகன்

தனது கல்வி நிறுவனங்களில் தேவையற்ற முறையில் நுழைந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் குரோம் லெதர் நிறுவன நிர்வாகத்திலிருந்து வெளியேறிய நிலையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக  குறிப்பிட்டு இருந்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்த இரு நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன், கடந்த 1982ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தபோது, அந்த நிறுவனம் சில நிலங்கள் வாங்கியது. அதில் ஜெகத்ரட்சகன் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தியது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், அதில் நில அபகரிப்பு நடைபெறவில்லை என வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் இரண்டு வழக்குகளை பதிவு செய்து  விசாரித்து வந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும்  ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது கல்வி நிறுவனங்களில் தேவையற்ற முறையில் நுழைந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் குரோம் லெதர் நிறுவன நிர்வாகத்திலிருந்து வெளியேறிய நிலையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக  குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகன் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: CBCID, Chennai High court, DMK

அடுத்த செய்தி