Home /News /chennai /

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் சான்றிதழ் செல்லாது... தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் தகவல்

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் சான்றிதழ் செல்லாது... தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் தகவல்

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் என்ற சாதி சான்றிதழ் செல்லாது...

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் என்ற சாதி சான்றிதழ் செல்லாது...

ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார், “ தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

    அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

    அதனைத் தொடர்ந்து பேசியவர்,” ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.

    Also see....சாப்பிட்டு பணம் தராமல் தகராறு: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

    இதுகுறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”  என்று தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Caste, Chennai, Dravidam

    அடுத்த செய்தி