முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் கஞ்சா சாக்லேட்.. பீகாரில் இருந்து ரயிலில் கொண்டுவந்து விற்கும் கும்பல் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னையில் கஞ்சா சாக்லேட்.. பீகாரில் இருந்து ரயிலில் கொண்டுவந்து விற்கும் கும்பல் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞர் கைது

கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞர் கைது

பீகாரில் இருந்து ரயில்கள் மூலமாக கஞ்சா சாக்லேட்டுகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அண்ணாசாலை பகுதியில் பீடாக்கடைகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அண்ணா சாலை பகுதிகளில் உள்ள  கடைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்ணா சாலையில் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் முன்பு உள்ள சாய் என்ற பான் கடையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்தக் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா உருண்டைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடையின் அருகே உள்ள குடோனில் சோதனை செய்தபோது சுமார் 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் 4 கிலோ கஞ்சா உருண்டைகள் என்பதும் தெரியவந்தது. பான் கடையில் வேலை பார்த்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுப்பட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ம்த கசரத் தூரி(25) என்ற இளைஞரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கசரத் தூரியிடம் விசாரணை நடத்திய போது, பீகார் மாநிலத்திலிருந்து ரயில்கள் மூலமாக கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா உருண்டைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்வதாக தெரியவந்தது.

பீகார் மாநிலத்தில் குறைவான விலையில் விற்கப்படும் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகளை சென்னையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கசரத் தூரியிடமிருந்து 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா உருண்டைகள் மற்றும் பல கிலோ மதிப்புள்ள ஹான்ஸ், குட்கா, மாவா, போன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6 வருடங்களாக சாய் பான் கடையை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

First published:

Tags: Cannabis, Chennai, Crime News, Tamil News