ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

மம்தா பேனர்ஜி, ஸ்டாலின்

மம்தா பேனர்ஜி, ஸ்டாலின்

Mamata Banerjee's | ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்வேன்? ஸ்டாலினை சந்தித்தபோது சென்னையின் பிரபலமான காபி ஒரு கப் அருந்தியுள்ளேன்” என்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை வந்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

  மேற்கு வங்க கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இன்று சென்னை வந்துள்ளார்.

  சென்னை வந்துள்ள மம்தா பேனர்ஜி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று  சந்தித்தார். அப்போது மம்தா பேனர்ஜியை  மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

  மம்தா பேனர்ஜி - ஸ்டாலின் சந்திப்பு

  அப்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

  இதையும் படிங்க : ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

  அப்போது, மம்தா பேனர்ஜி பேசியதாவது, “ஸ்டாலின் எனது சகோதரரை போன்றவர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது ஆளுநர் அழைத்ததால் அவரது குடும்ப நிகழ்விற்கு வந்துள்ளேன். ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்வேன்? ஸ்டாலினை சந்தித்தபோது சென்னையின் பிரபலமான காபி ஒரு கப் அருந்தியுள்ளேன்” என்றார்.

  மேலும், “சில விசயங்கள் குறித்து பேசியுள்ளோம். அரசியல் தொடர்பாக பேசவில்லை. எந்த கட்சி குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை. இது சகோதரர், சகோதரி என்ற உறவிலான சந்திப்பு மட்டுமே” என்றார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: CM MK Stalin, Mamata banerjee, Tamilnadu